Naan Nee lyrics
 by Santhosh Narayanan
		
		
[பாடல் வரிகள் - "நான் நீ" - சந்தோஷ் நாராயணன், ஷக்திஸ்ரீ கோபாலன், தீ]
[Pre-Chorus]
நான், நீ, நாம் வாழவே உறவே...
நீ, நான், நாம் தோன்றினோம் உயிரே...
[Refrain]
தாப பூவும் நான் தானே...
பூவின் தாகம் நீ தானே...
[Chorus]
நான் பறவையின் வானம்...
பழகிட வா, வா, நீயும்...
நான் அனலிடும் மேகம்...
அணைத்திட வா, வா, நீயும்...
[Refrain]
தாப பூவும் நான் தானே...
பூவின் தாகம் நீ தானே...
[Verse 1]
உயிர் வாழ, முள் கூட
ஓர் பறவையின் வீடாய் மாறிடுமே, உயிரே
உன் பாதை மலராகும்...
நதிவாழும், மீன் கூட
ஓர் நாளில் கடலை சேர்ந்திடுமே, மீனே
கடலாக அழைக்கின்றேன்...
[Refrain]
தாப பூவும் நான் தானே...
பூவின் தாகம் நீ தானே...
[Verse 2]
அனல்காயும் பறையோசை
ஓர் வாழ்வின் கீதம் ஆகிடுமே, அன்பே
மலராத நெஞ்சம் எங்கே?
பழி தீர்க்கும் உன் கண்ணில்
ஓர் காதல் அழகாய் தோன்றிடுமே, அன்பே
நீ வாராயோ?
[Refrain]
தாப பூவும் நான் தானே...
பூவின் தாகம் நீ தானே...
[Pre-Chorus]
நான், நீ, நாம் வாழவே உறவே...
நீ, நான், நாம் தோன்றினோம் உயிரே...
[Refrain]
தாப பூவும் நான் தானே...
பூவின் தாகம் நீ தானே...
[Chorus]
நான் பறவையின் வானம்...
பழகிட வா, வா, நீயும்...
நான் அனலிடும் மேகம்...
அணைத்திட வா, வா, நீயும்...
[Refrain]
தாப பூவும் நான் தானே... (நான், நீ, நாம்)
பூவின் தாகம் நீ தானே... (நான், நீ, நாம்)