Unga Prasannam lyrics
by Ostan Stars
TAMILENGLISH
நீர் இல்லாமல் நான் இல்லயே
நீர் சொல்லாமல் உயர்வு இல்லயே
உங்க பிரசன்னம் தான் எனக்கு முகவரி
உங்க பிரசன்னம் தான் எனது தகுதி
அழைத்த நாள் முதல் இதுவரை
என்னை விலகாத வாக்குத்தத்தம் பிரசன்னமே
உடைந்த நாட்களில் கூடவே இருந்து
சுகமாகும் மருத்துவம் பிரசன்னமே
விலை போக என்னையும் மலை மேலே நிறுத்தி
அழகு பார்ப்பதும் பிரசன்னமே
கல்வி அறியும் பல்கலை சான்றும்
இல்லாமல் பயன்படுத்தும் பிரசன்னமே
அழைக்கப்பட்டேன் நியமிக்கப்பட்டேன்
நிரூபிப்பதும் உங்க பிரசன்னமே
பிற பாஷை பேசுவோம்
பிற தேசம் வாழுவோம்
என வேண்டி கேட்பதும் பிரசன்னமே