Archanai Malaraga tamil catholic song lyrics
by Ostan Stars
அர்ச்சனை மலராக
ஆலயத்தில் வருகின்றோம்
ஆனந்தமாய் புகழ்கீதம்
என்றும் பாடுவோம்
அர்ச்சனை மலராக
ஆலயத்தில் வருகின்றோம்
ஆனந்தமாய் புகழ்கீதம்
என்றும் பாடுவோம்
அர்ப்பணித்து வாழ்ந்திட
அன்பர் உம்மில் வளர்ந்திட
ஆசையோடு அருள் வேண்டிப் பணிகின்றோம்
அர்ப்பணித்து வாழ்ந்திட
அன்பர் உம்மில் வளர்ந்திட
ஆசையோடு அருள் வேண்டிப் பணிகின்றோம்
அர்ச்சனை மலராக
ஆலயத்தில் வருகின்றோம்
ஆனந்தமாய் புகழ்கீதம்
என்றும் பாடுவோம்.....
Music
தாயின் கருவிலே
உருவாகும் முன்னரே
அறிந்து எங்களை
தேர்ந்த தெய்வமே
பாவியாகினும்
பச்சைப் பிள்ளையாகினும்
அர்ச்சித்திருக்கின்றீர்
கற்பித்திருக்கின்றீர்
மனிதராகப் புனிதராக
வாழப் பணிக்கின்றீர்
பிறரும் வாழ
எங்கள் வாழ்வைக்
கொடுக்க அழைக்கின்றீர்
அஞ்சாதீர் என்று
நம்மைக் காத்து வருகின்றீர்
அர்ச்சனை மலராக
ஆலயத்தில் வருகின்றோம்
ஆனந்தமாய் புகழ்கீதம்
என்றும் பாடுவோம்
உமது வார்த்தையை
எங்கள் வாயில் ஊட்டினீர்
உமது பாதையை
எங்கள் பாதையாக்கினீர்
உமது மாட்சியை
எம்மில் துலங்கச் செய்கின்றீர்
உமது சாட்சியாய்
நாங்கள் விளங்கச் சொல்கின்றீர்
அழித்து ஒழிக்க கவிழ்த்து
வீழ்த்த திட்டம் தீட்டினீர்
கட்டி எழுப்ப நட்டு வைக்க
எம்மை அனுப்பினீர்
அஞ்சாதீர் என்று நம்மைக்
காத்து வருகின்றீர்
அர்ச்சனை மலராக
ஆலயத்தில் வருகின்றோம்
ஆனந்தமாய் புகழ்கீதம்
என்றும் பாடுவோம்
அர்ச்சனை மலராக
ஆலயத்தில் வருகின்றோம்
ஆனந்தமாய் புகழ்கீதம்
என்றும் பாடுவோம்
அர்ப்பணித்து வாழ்ந்திட
அன்பர் உம்மில் வளர்ந்திட
ஆசையோடு அருள் வேண்டிப் பணிகின்றோம்
அர்ப்பணித்து வாழ்ந்திட
அன்பர் உம்மில் வளர்ந்திட
ஆசையோடு அருள் வேண்டிப் பணிகின்றோம்
அர்ச்சனை மலராக
ஆலயத்தில் வருகின்றோம்
ஆனந்தமாய் புகழ்கீதம்
என்றும் பாடுவோம்